கோலாலம்பூர், ஜூன் 27-
மஇகாவில் பதவிகளுக்குப் போட்டி நிலவுவது ஆரோக்கியமான நடவடிக்கை. இதனை தாம் பெரிதும் வரவேற்பதாக டத்தோ டி.மோகன் தெரிவித்தார் .
ஒருவரின் சேவையையும், அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குப் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பதற்கு போட்டி வகை செய்யும் என்று வரும் மஇகா தேர்தலில் தமது உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக நான்காவது முறையாகப் போட்டியிடும் டத்தோ டி மோகன் குறிப்பிட்டார்.
“உதவி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அனைவரும் கட்சியில் நல்ல அனுபவமிக்கவர்கள். அனைவரும் இப்பதவிக்குத் தகுதியானவர்களே” என்றார் அவர்.
வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவின் மூன்று உதவி தலைவர்களுக்கான போட்டியில் டத்தோ டி.மோகன், டத்தோ முருகையா, செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் மற்றும் டத்தோ அசோஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.