Homeசமூகம்தெக்குன் வாரியக் குழு உறுப்பினரானார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்!

தெக்குன் வாரியக் குழு உறுப்பினரானார் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்!

புத்ராஜெயா, ஜூலை 25-

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ்   ஜோர்ஜ் தெக்குன் நேஷனல் வாரியக் குழுஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு  துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் பெரும் முயற்சியில் இவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்குள்ள தமது அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டத்தோ ரமணன் டாக்டர் குணராஜ்ஜிடம் நியமன கடிதத்தை வழங்கினார்.

இவரின் நியமனம் நேற்று முதல் நடப்புக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவர் மற்றும்  கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணைத் தலைமை செயலாளர் டத்தோ ஹாஜி ஸம்ரி  சாலே,  டத்தோ ரமணனின்  அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், தெக்குன் நேஷனல் இயக்குநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ அடாம்  அப்துல் கனி, தெக்குன் நேஷனல் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல்லா சானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாம் இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதற்குக் காரணமான  டத்தோ ரமணன், தொழில் முனைவர் மற்றும்  கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் இவோன் பெனடிக் ஆகிய இருவருக்கும் டாக்டர் குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

-பெர்னாமா

.

spot_img

latest articles

explore more