ஷா ஆலாம், ஜூலை 27 –

முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் சித்தி ஜஹாரா சுலைமான் காலமானார். அவருக்கு வயது 75.

தனது தாயார் நேற்று இரவு மணி 11.30க்கு செர்டாங் மருத்துவமனையில் காலமானதாக சித்தி ஜஹாராவின் மூத்த மகன் தீமோய்ர் ஜாக்ரி சமாருடின் கூறினார்.

சித்தி சஹாரா அம்னோ மற்றும் நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியது. இவற்றை அனைத்து இன மக்களும் என்றும் நினைவு கூர்வர் என்று அம்னோ மகளிர் பிரிவு தலைவி டத்தோஸ்ரீ டாக்டர்
நோராய்னி அகமது குறிப்பிட்டார்.

“துணையமைச்சர் பதவி உட்பட அரசாங்கத்தில் பல உயரிய பதவிகள் வகித்திருக்கும் சித்தி சஹாரா நாட்டிற்கும் அம்னோ மகளிர் பிரிவு மேம்பாட்டிற்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்” என்றார் நோராய்னி.

மறைந்த சித்தி சஹாராவின் குடும்பத்தினருக்கு அம்னோ தலைவர்கள் பலர் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவரின் நல்லுடல் இங்குள்ள செக்ஷன்ஸ் 21, இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இன்று காலை 11. 30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது .
-பெரித்தா ஹாரியான்