Homeசமூகம்தமிழகத்தில் விருது பெற்ற  10 மலேசிய பெண்கள் தலைநகரில் கௌரவிப்பு !

தமிழகத்தில் விருது பெற்ற  10 மலேசிய பெண்கள் தலைநகரில் கௌரவிப்பு !

 

  கோலாலம்பூர், ஜூலை 27 –

 பல்வேறு துறைகளில் சாதனை படைத்த  பெண்களை  கௌரவிப்பதற்காக  அண்மையில்  தமிழகத்தில்  நடைபெற்ற  உலகளாவிய  சாதனையாளர்கள்  பட்டியலில்  மலேசியாவைச் சேர்ந்த 10 பெண்கள் இடம் பெற்றிருந்தனர் . 

இவர்கள் அனைவரும் மஇகா நேதாஜி மண்டத்தில் இன்று நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில்  சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். 

எம்எஸ்கே புரோடக்‌ஷன்ஸ்  இயக்குனர் செல்வமேரி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மஇகா  தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இவர்கள் அனைவரையும் சிறப்பு செய்தார். 

 சாதனையாளர்களான ஆசிரியர் கற்பகம் கிருஷ்ணசாமி, உமா ஜெரலின் லூய்ஸ்,சன்சிதா ஆதிமூலம், திலகவதி கார்மேகம், யோகேஸ் ராஜேந்திரன், டாக்டர் ஜெசிந்தா ஜெயரத்னம், ஜெகதீஸ்வரி சீத்தாராமன், செல்வமேரி எம். கிருஷ்ணமூர்த்தி, சுபித்ரா ரத்தினம் மற்றும் டாக்டர் ஷோபனா சுப்ரமணியம் ஆகியோரை டத்தோஸ்ரீ சரவணன் விருது வழங்கி கௌரவித்தார். 

தத்தம் துறையில் சாதனை படைத்து அனைத்துலக நிலையில் விருது பெறும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்ட இப்பெண்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை இந்நிகழ்ச்சியில் எடுத்துரைத்தது கேட்போருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகா. 

இவர்களைப் பற்றிய காணொளி நிகழ்ச்சிக்கு மேலும் முத்தாய்ப்பாக அமைந்தது. 

மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நேர்மையையும் கடின உழைப்பையும் தாரக மந்திரமாகக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றப் படிகளைக் காண்பது நிச்சயம் என்றார் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன். 

பல சவால்களைக் கடந்து இந்தியர்கள் அரிதாகக் காணப்படும் துறைகளில் கூட ஈடுபட்டு பெண்கள் இன்று சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. இவர்கள் அனைவரும் தத்தம் துறையில் மேன்மேலும் உயர வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்தார். 

இதனிடையே, இந்நிகழ்வு தமிழகத்தில் விருது பெற்ற மலேசிய பெண்களுக்கு  உத்வேகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் தாங்களும் சாதனை படைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கும்  உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான செல்வமேரி. 

spot_img

latest articles

explore more