ஜொகூர் பாரு, ஜூலை 28-

மலேசிய சோஷலிஸ் கட்சியின் (பிஎஸ்எம்) புதிய தலைமைச் செயலாளராக  சிவரஞ்சனி மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

 பிஎஸ்எம்  கட்சியின் தொழிலாளர் பிரிவு  தலைவராக  துடிப்புடன் செயல்பட்டு வரும் சிவரஞ்சனி  கடந்த 22 ஆண்டுகளாக  தொழிற்சங்கம்  மற்றும்  தொழிலாளர்களின் நலனுக்காகக்  குரல் கொடுத்து வருகிறார் .

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்  பிஎஸ்எம்  கட்சியின் தலைமைச் செயலாளராக  பொறுப்பு  வகித்து வந்த  சிவராஜன் ஆறுமுகம்  தனது பதவியை  தற்காத்துக் கொள்ள  போட்டி போடாததைத் தொடர்ந்து  சிவரஞ்சனி  இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இங்கு நடைபெற்ற  பிஎஸ்எம் 26ஆவது  பேராளர் மாநாட்டின் போது  கட்சி தேர்தலும் நடைபெற்றது .

அவ்வகையில் கட்சியின்  தேசிய தலைவராக  டாக்டர் ஜெயக்குமார்  தேவராஜ்  (முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்) ,  துணைத்  தலைவராக  எஸ். அருட் செல்வம் , தலைமைச் செயலாளராக  சிவரஞ்சனி மாணிக்கம் , துணை தலைமைச் செயலாளராக  பவானி கேஸ் , பொருளாளராக  சோ சூக் ஹூவா , துணை பொருளாளராக  எஸ் மாதவி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

மத்திய  செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில்  அர்விந்த்  கதிர்செல்வம் (புதிது), முன்னாள் சோஷலிஸ் இளைஞர் பிரிவு தலைவர் சோங் யீ ஷான், சூ சோன் காய், காந்தீபன் நந்த கோபாலன் (புதிது), முன்னாள் சோஷலிஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கார்திகேஸ் ராஜமாணிக்கம், நிக் அஜிஸ் அஃபிக் (புதிது), முன்னாள் செமினி சட்டமன்ற வேட்பாளர் பரமேஸ் ஏழுமலை, முன்னாள் தலைமைச் செயலாளர் சிவராஜன், முன்னாள் கேமரன் மலை நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பாலசுப்பிரமணியம் (புதிது) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.