கோலாலம்பூர், ஜூலை 28-
கடற்படை அதிகாரி ஜூல்ஃபார்ஹான் ஒஸ்மான் சுல்கார்னைனைக் கொலை செய்ததாக ஆறு முன்னாள் மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சரியான தீர்ப்பே என்று மலேசிய குற்றச் செயல் தடுப்பு அறவாரியம்(எம்சிபிஎஃப்) வர்ணித்தது .
இந்த மாணவர்களுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகக் கடைசியாக விதித்த தண்டனை மீது மலேசிய அடிப்படை மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஆட்சேபம் தெரிவித்திருப்பது அதிருப்தி அளிப்பதாக எம்சிபிஎஃப் முதிர்நிலை உதவி தலைவர் டத்தோஸ்ரீ அயோப் யாக்கோப் குறிப்பிட்டார்.
கொலை மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்கு கட்டாய சிறை தண்டனையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
“எனினும், குறிப்பிட்ட வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு என்பதை சுஹாகாம் புரிந்து கொள்ள வேண்டும் “ என்று அயோப் அறிக்கை ஒன்றின் வழி சுட்டிக் காட்டினார் .