Homeசமூகம்நாடறிந்த எழுத்தாளர் ரய்லி முனியாண்டி காலமானார்! 

நாடறிந்த எழுத்தாளர் ரய்லி முனியாண்டி காலமானார்! 

கோலாலம்பூர், ஜூலை 31-

நாடறிந்த   எழுத்தாளரும், கவிஞருமான ரய்லி முனியாண்டி இன்று காலமானார். 

 உலு சிலாங்கூர்  மஇகா தொகுதியின் முன்னாள்  செயலாளர், கெர்லிங் தோட்ட மஇகாவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வாயிலாக மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியவர்  ரய்லி முனியாண்டி. 

இவர் தமது கவிதைகள் மற்றும் படைப்புகள் வாயிலாக  தமிழ்ப் பத்திரிகைகளை நீண்ட காலமாக அலங்கரித்து வந்தவர். 

ரய்லி முனியாண்டியின்  ‘காலம் சொல்லும் கவிதை 100’  நூல் இம்மாதம் 20ஆம் தேதி தலைநகர் நேதாஜி மண்டபத்தில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு அநேகன் இவ்வேளையில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேல் விபரங்களுக்கு

சதன்குமார் 017-2677783

மதன்குமார் 019-2460009

spot_img

latest articles

explore more