கோலாலம்பூர், ஆக. 1-

லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் வெளியீடாக யோகி பாபு நடிக்கும் “போர்ட்” திரைப்படம் நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையீடு காண்கிறது. 

 இரண்டாம் உலகப் போரில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு கதை  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களைக் கவரும் வகையில் மாறுபட்ட கோணத்தில் இந்த படத்தைத் தயாரித்திருக்கிறார் யோகி பாபு. பல பிரபலமான கலைஞர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.