கோலாலம்பூர், அக். 26-

காமன்வெல்த் நாடுகளின் வரி நிர்வாக அமைப்பு தலைவராகடத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அபு தாரிக் உள்நாட்டு வருமான வரி இலாகாவின் தலைமை இய‌க்குன‌ரும் தலைமை செயல்முறை அதிகாரியுமாவார்.

2024-2027 தவணைக்கானஇவரின் இந்த நியமனம் இம்மாதம் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 22 ஆம் தேதி மொரிஷியஸில் நடைபெற்ற 44 ஆவது காமன்வெல்த் நாடுகளின் வரி நிர்வாக அமைப்பின் தொழில்நுட்ப மாநாட்டில் அபு தாரிக் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.