பந்திங், அக். 30-
இத்தீபத் திருநாள் குதூகலத்தில் வசதி குறைந்த மாணவர்களும் திளைத்திருக்கும் வகையில் இங்குள்ள தெலுக் டத்தோ பந்திங் மற்றும் கோல லங்காட் சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
டத்தோ கணேசன் அப்பாசாமி அன்பளிப்பு செய்த இந்த புத்தாடைகளை மஇகா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கே. கேசவன் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று தங்களுக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்வு செய்யச் செய்தது இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் மஇகா கோல லங்காட் தொகுதி தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன், மஇகா சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு தலைவர் கோபி, தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கணேஷ் ராம், சேகர் செல்வம் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுத்த டத்தோ கணேசனுக்கு கேசவன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


