சிப்பாங், அக். 31-
குடும்பத்தில் மகிழ்ச்சி, சமூகத்தில் முன்னேற்றம் என இத்தீபத் திருநாள் அனைவர் மனதிலும் உயர் எண்ணங்களை விதைக்கட்டும் என்று மஇகா சிப்பாங் தொகுதி நிரந்தர தலைவர் டத்தோ வே. குணாளன் தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் செயல்களில் நற்பயன்களும் உடைய சேவைகள் வழி சமூகத்திற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் தமது தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான குணாளன்.