Homeசமூகம்நாளை நவ. 9 ஆம் தேதி புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி...

நாளை நவ. 9 ஆம் தேதி புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு!

பெட்டாலிங் ஜெயா, நவ. 8-

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான
தீபாவளி பொது உபசரிப்பு நாளை நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை
இங்குள்ள லாமான் எம்.பி.பி.ஜே. வளாகத்தில் நடைபெறும்.

இரவு 7.00 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இந்த பொது
உபரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து
கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஆர்.ராஜீவ் குறிப்பிட்டார்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்துபசரிப்போடு இந்திய
பாரம்பரியக் கலையான பரதம் உள்ளிட்ட நடனங்களும் ஆடல், பாடல்
நிகழ்வுகளும் இடம் பெறும் என்று அவர் மேலும் சொன்னார் .

ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகள்
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் சிறப்பு
அங்கமாக ராஜீவ் தோசை சுட்டு விருந்தினர்களுக்கு பரிமாறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more