கோலாலம்பூர், நவ.5-

  1. உலக மக்களுக்கு வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்பும் மறைநூல் திருவள்ளுவரின் திருக்குறளாகும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் திருக்குறளின் சிறப்புகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.

நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பொருத்தமான திருக்குறளை ஒப்புவிப்பார். அதன்

அர்த்தத்தைப் புரிந்து கொண்டதால்தான் திருக்குறளுக்கு அவர் முக்கியத்துவம் வழங்குகிறார்.

இதன் வாயிலாக இந்தியர்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார்.

ஆனால், பிரதமர் குறளைப் பதிவு செய்த மறு நொடியே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரிக்கின்றனர்.

இது வேதனை தருகிறது . திருக்குறள் சிரிப்பதற்கும் கேலி செய்வதற்கும் அல்ல.

ஆகையால், திருக்குறளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.