Homeசமூகம்பைக்கேர்-1000 திட்டத்தின் கீழ்200 இளைஞர்கள் பயனடைந்தனர் - பாப்பாராய்டு 

பைக்கேர்-1000 திட்டத்தின் கீழ்200 இளைஞர்கள் பயனடைந்தனர் – பாப்பாராய்டு 

 

 

ஷா ஆலம், நவ. 20-

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பைக்கேர்-1000 திட்டத்தின் கீழ் கடந்தாண்டு 200 இளைஞர்கள் பயனடைந்தனர் என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.

இத்திட்டத்திற்காக கடந்த 2022ஆம் ஆண்டு 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் நிர்ணயிக்கட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த 100 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற மாநில சட்டமன்ற கூட்டத்தில் பைக்கேர்-1000 திட்டம் குறித்துபேசிய பாப்பாராய்டு, கிக் எனப்படும் தற்காலிக பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக உணவு அல்லது பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்பணமாக 1,000 வெள்ளி இத்திட்டத்தின் கீ‌ழ் வழங்கப்படும் என்றார்.

மனித வள துறையின் சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.)கீழ் இந்த பைக்கேர்-1000 திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் விவரித்தார்.

அவ்வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குமோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்கும் நிகழ்வு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்றதாக அவர் சொன்னார்.

 

spot_img

latest articles

explore more