கோலாலம்பூர், நவ. 20-
விவேக போக்குவரத்து முறை(ஐடிஎஸ்) என்பது சாலை கட்டமைப்பு துறையில் செயல்பாடு மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதற்கான புத்தாக்க அணுகுமுறையாகும்.
ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற மேம்பாடடைந்த நாடுகளில் ஐடிஎஸ் தொழில்நுட்பம் போக்குவரத்து துறையில் மேம்பாட்டைக் கொண்டு வருவதில் அளப்பரிய பங்காற்றியுள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இந்த முறையானது சாலை விபத்துகளைக் குறைத்திருப்பதோடு சிறந்த போக்குவரத்து நிர்வாக முறையின் வாயிலாக காற்றின் தரத்தையும் உயர்த்தியுள்ளது என்று இங்கு பொதுப்பணி அமைச்சில் ஐடிஎஸ் விவேக போக்குவரத்து முறை மீதான கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதில் போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோலா, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துணையமைச்சர் டத்தோ முகமது யூசோப் அப்டால், பொதுப்பணி மற்றும் பல இலாகாக்களின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


