கோலாலம்பூர், நவ.28-
நாட்டின் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தமது 87-ஆவது வயதில் இன்று காலமானார்.

நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய இவர் உயர் கல்வி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் அதீத அக்கறை காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும் ஆனந்த கிருஷ்ணன் பெரும் பங்காற்றியுள்ளார்.