Homeவர்த்தகம்குடும்ப மாதர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 512,518 பெண்கள் பதிவு! - கஸ்தூரி பட்டு

குடும்ப மாதர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 512,518 பெண்கள் பதிவு! – கஸ்தூரி பட்டு

 

கோலாலம்பூர், டிச. 30-
குடும்ப மாதர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (எஸ்கேஎஸ்எஸ்ஆர்) இவ்வாண்டு முழுமையும் 512,518 பெண்கள் தங்களைப் பதிந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் வழி இவர்கள் மொத்தம் 61.5 லட்சம் வெள்ளி சந்தா செலுத்தியிருப்பதாகவும் இதன் வழி மனித வள அமைச்சின் 100 விழுக்காடு இலக்கு அடையப்பட்டிருப்பதாகவும் சமூக பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) குடும்ப மாதர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கஸ்தூரி பட்டு தெரிவித்தார்.

” இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்ப மாதர்களில் பெர்கேசோ கடந்த நவம்பர் மாதம் வரை 2,019 பேருக்கு 3.9லட்சம் வெள்ளி இழப்பூட்டை வழங்கியது”என்றார்.

“குடும்ப மாதர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் அவர்களின் சமூக நலன்களைப் பேணுவதிலும் இத்திட்டம் எத்தகைய பலனை அளித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது ” என்று இங்கு 2024எஸ்கேஎஸ்எஸ்ஆர் அடைவு நிலை மீதான செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

 

 

 

spot_img

latest articles

explore more