ஈப்போ ஜன. 1-இங்குள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் முருகனுக்கு ஒன்றரை லட்ச திருநாம அர்ச்சனை நடைபெற்றது.

பக்தி பரவசமூட்டும் இந்நிகழ்வு குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

அதே வேளையில் , ஈப்போ அருணகிரி நாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை மணி 6.00 தொடங்கி இரவு 9 மணி வரை முருகனின் வேல் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான டாக்டர் வ. ஜெயபாலன் குறிப்பிட்டார்.