Homeசமூகம்முன்னேற்றப் பாதையில் பயணிப்போம்! டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

முன்னேற்றப் பாதையில் பயணிப்போம்! டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

 

 

கிள்ளான், ஜன. 1-கல்வி & வர்த்தக மேம்பாடு , திட்டமிட்ட சீரான வாழ்க்கை முறை, சேமிப்பு ஆகிய சிந்தனையுடன் நாட்டின் அரசியல் சுழலுக்கேற்ப வாழ்க்கையை கட்டமைத்து முன்னேற்றப் பாதையில் அனைவரும் பயணிப்போம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆங்கில வருடம் அனைவருக்கும் வளர்ச்சியைத் தந்து தளர்ச்சியை நீக்கும் வருடமாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்த ஓராண்டுக்கான புதிய திட்டங்களை வகுப்போம். நடந்த விஷயங்களை ஆராய்ந்து, சிலவற்றைத் திருத்திக் கொள்வோம், சிலவற்றைத் தொடர்ந்து கடைபிடிப்போம். இவை அனைத்தும் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டை நோக்கியே அமைந்திருக்கும். மலேசியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்றார் அவர்.

-நன்றி ஏஎஸ்டி நியூஸ்

spot_img

latest articles

explore more