Homeசமூகம்நஜீப் ஆதரவு பேரணி:ஆயிரக்கணக்கான மஇகா உறுப்பினர்கள் பங்கேற்பர்!  -டத்தோஸ்ரீ எம். சரவணன்

நஜீப் ஆதரவு பேரணி:ஆயிரக்கணக்கான மஇகா உறுப்பினர்கள் பங்கேற்பர்!  -டத்தோஸ்ரீ எம். சரவணன்

பெட்டாலிங் ஜெயா – ஜன. 2-முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகா உறுப்பினர்கள் பங்கேற்பர் என்று இக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

“இப்பேரணியானது அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டது. இது அரச ஆணை தொடர்பாக நஜீப்பிற்கு நீதி கிடைப்பதற்காக நடத்தப்படுகிறது”என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

“இப்பேரணி புத்ரா ஜெயாவில் வரும் திங்கட்கிழமை நடைபெறும். இதில் அரசியல் நோக்கம் ஏதும் கிடையாது “என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

பாஸ் ஏற்பாட்டிலான இப்பேரணி அரச ஆணை மீதான விசாரணையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நஜீப்பின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கே என்று கூறப்படுகிறது.

 

spot_img

latest articles

explore more