ஈப்போ, ஜன. 14-புந்தோங்கில் உள்ள டி. என். எஸ். ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சேவை மையத்தில் அதன் ஸ்தாபகர் சங்கரலிங்கம் தலைமையில் சிறப்பு வழிபாடு் நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த மையத்தில் இருந்து சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு வழிபாட்டுடன் வழியனுப்பும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டும் இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. ஐயப்பன் பக்தர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இந்த மையத்தில் இருந்து சுமார் 80 பக்தர்கள் சபரி மலைக்குச் செல்கின்றனர்.
மலேசியாவில் இருந்து சபரி மலைக்கு புறப்படும் ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு நுழைவு வழியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சேவை தொடரவேண்டும் அதற்கு ஆதரவாக இருக்கும் சமுகத் தலைவர்களுக்கு சங்கரலிங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.