கோலாலம்பூர்,பிப். 6– அனைத்து மலேசியர்களும் தைப்பூச நேரலை ஒளிபரப்பை பிப்ரவரி 9, இரவு 8 மணி முதல் பிப்ரவரி 11, இரவு 10 மணி வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழலாம். நன்றி கந்தா என்ற கருப்பொருளில் மலரும் இந்த 3-நாள் நேரலை ஒளிபரப்பில் முதன்முறையாக ரத ஊர்வலக் காட்சிகள் உட்பட பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டாணி ஆகியவற்றிலுள்ள புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்கள் மட்டுமல்லாது இந்தியா மற்றும் இலங்கையில் அமைந்துள்ள கோவில்களில் நடைபெறும் தைப்பூசத்தின் சிறப்பு காட்சிகளும் இடம்பெறும்.

மேலும், அனைத்து மலேசியர்களும் ராகா வானொலியில் பக்திப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்களின் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் மற்றும் பக்தர்களின் வீடுகளில் தைப்பூச அனுபவத்தை மீண்டும் ஒருமுறை கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் இடம்பெறும் எங்களின் இந்த 3-நாள் நேரலை ஒளிபரப்பின் மூலம், நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்குப் பல்வேறு கோயில்களுக்கான அணுகலை வழங்குவதோடு அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து இந்தப் புனிதமான சடங்கில் பங்கேற்க அனுமதிக்கிறோம் என்று நம்புகிறோம். தைப்பூசத்தைக் கொண்டாடுபவர்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

மேலும், இந்த மங்களகரமான விழாவைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பாண்டி துரை, பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், டாக்டர் என். தர்மலிங்கம் நடராஜன், டாக்டர் சில்லாலி எஸ்.கந்தசாமி மற்றும் வரதராஜு லோகநாதன் ஆகிய சிறப்பு விருந்தினர்களின் கலந்துரையாடலையும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

சோதிராஜன் பரஞ்சோதி, மீனாகுமாரி கடியப்பன், கோமதி வேலுபிள்ளை, அருணா ராஜ் தேவராஜு, இந்துமதி சுபர்மணியம், நதியா ஜெயபாலன், மகேந்திரன் வேலுபிள்ளை, ஸ்ரீ குமரன் முனுசாமி, ரேவதி மாரியப்பன், கபில் கணேசன், மற்றும் சிவராஜ் லிங்கராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த நேரலை ஒளிபரப்பு பின்வரும் உள்ளூர் ஆலயங்களில் இருந்து ஒளிபரப்பப்படும்:

பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (கோம்பாக், சிலாங்கூர்)

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (கோம்பாக், சிலாங்கூர்)

அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)

கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் (ஈப்போ, பேராக்)

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கை பெட்டானி, கெடா)

ஆஸ்ட்ரோ ஒன் தொகுப்புகள் இப்போது ரிம49.99-லிருந்து கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்ற பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்கு தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.