ஷா ஆலம், பிப். 7-நாடு முழுவதும் உள்ள பி40 குடும்பங்களைச் சேர்ந்த 25 இளைஞர்கள் டிவெட் தொழிற்கல்வி துறையில் மேற்கல்வி தொடரும் வகையில் யாயாசான் ஹாசானா கார்சம் அகெடமியுடன் இணைந்து 450,000 மதிப்பிலான உபகார சம்பளத்தை வழங்கவிருக்கிறது.
புறநகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் டிவெட் தொழிற்கல்வி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக இக்கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாடு வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் அதே வேளையில் இளைஞர்கள் நிலையான வருமானத்தைப் பெறுவதையும் இந்நடவடிக்கை ஊக்குவிக்கும்.
இளையோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதன் முறையாக யாயாசான் ஹாசானா கார்சம் அகெடமியுடன் இணைந்து இத்தகைய கல்வி வாய்ப்பை வழங்குகிறது.
புறநகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கார்சம் கல்லூரியில் வாகன தொழில் சார்ந்த பயிற்சியை இதன் வழி மேற்கொள்ளலாம்.
ஹாசானா சிறப்பு மான்யத்தின் கீழ் இளைஞர்கள் வாகன தொழிற்துறையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் இத்திட்டத்திற்கு நிதியமைச்சு ஆதரவு வழங்குகிறது.
மேல் விவரங்களுக்கு www.yayasanhasanah.org மற்றும் carsomeacademy. my அல்லது 016-2629838 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


