Homeசமூகம்மித்ராவின் மலேசிய இந்திய இளைஞர் திறன் பயிற்சிகளில் பங்கேற்க 3,000 பேர் விண்ணப்பம்: பிரபாகரன் தகவல்

மித்ராவின் மலேசிய இந்திய இளைஞர் திறன் பயிற்சிகளில் பங்கேற்க 3,000 பேர் விண்ணப்பம்: பிரபாகரன் தகவல்

கிள்ளான், பிப் 9-கெசுமா, எச்ஆர்டி கோர்ப், மித்ராவின் மலேசிய இந்திய திறன் பயிற்சிகளில் பங்கேற்கும் பொருட்டு இதுவரை 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களுக்குத் திறன் பயிற்சியளிக்கும் வகையில் மனிதவள அமைச்சு (கெசுமா), எச்ஆர்டி கோர்ப், மித்ரா ஆகியவற்றின் கீழ் மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் பயிற்சித் திட்டம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு, ஆபத்தான பொருட்களை உள்ளடக்கிய கனரக லோரி ஓட்டுநர், விவேக  வேளாண்மை உட்பட அதிக தேவை உள்ள துறைகளில் இப்பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இப்பயிற்சிகளுக்கு இதுவரை 3,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருப்பதாக இங்கு நடைபெற்ற ஆபத்தான பொருட்கள் ஒருங்கிணைந்த லோரி ஓட்டுநர் பயிற்சி திட்ட நிகழ்வில் உரை நிகழ்த்தியபோது பிரபாகரன் குறிப்பிட்டார்.

இப்பயிற்சிக்கு அதிகமான லோரி ஓட்டுநர்கள் விண்ணம் செய்திருப்பதைத் தான் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.

“இதன் வழி இந்த சிறப்புப் பயிற்சிக்கு அதிக தேவைகள் இருப்பது தெரிகிறது” என்றார் பிரபாகரன்.

அதே வேளையில், இந்தியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையும் காண முடிகிறது என்றார்.

“இந்தப் பயிற்சி லோரி ஓட்டுநர்கள் மனநிறைவான சம்பளத்தைப் பெறுவதை உறுதிப்படுத்துவதோடு பணியின் பாதுகாப்பையும் தற்காக்கும்”.

இந்த மூன்று நாள் பயிற்சி, பங்கேற்பாளர்களிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தியது.

அதே வேளையில், பட்டதாரிகள் தொழில் முனைவோராகும் வாய்ப்பு, உயர் பதவி போன்ற அனுகூலங்களைப் பெறவும் தகுதி பெறுவர்.

இந்த நிபுணத்துவ பயிற்சியில் வழங்கப்படும் சான்றிதழ் லோரி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்றுவதற்கு உதவும் என்று பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆறு மாதங்களாக வேலை தேடி வரும் தனக்கு இப்பயிற்சி திட்டம். தனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக வி. கலைச்செல்வன்(29) விவரித்தார்.

சான்றிதழுடன் கூடிய இப்பயிற்சி வழங்கப்பட்டதற்கு மடானி அரசுக்கு நன்றி தெரிவித்தார் கலைச்செல்வன்.

இந்தப் பயிற்சியின் மூலம் ஒரு லாரி ஓட்டுநராக சான்றிதழைப் பெறுவதோடு தனது வாழ்க்கையை ஒரு நிர்வாகப் பதவிக்கு மேம்படுத்தும் வாய்ப்பையும் தான் பெறவிருப்பதாக ஈப்போவைச் சேர்ந்த டி. தேவேந்திரன்(38) கூறினார்.

 

spot_img

latest articles

explore more