பலாக்கோங், பிப். 24-

காற்பந்தாட்ட விளையாட்டு மற்றும் குயோவ் எஃப்சி காற்பந்து குழுவினருக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அணியினருக்கு பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் ஜெர்சியை அன்பளிப்பு செய்தார்.

இங்குள்ள ஸ்ரீ தீமாவில் குயோவ் எஃப்சி காற்பந்து நிர்வாக குழுவினர் மற்றும் காற்பந்தாட்ட வீரர்களுடன் வேய்ன் ஓங் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

நாட்டில் 70 ஆண்டுகளாக துடிப்புடன் இயங்கி வரும் காற்பந்து குழு என்ற வரலாற்றைக் கொண்டுள்ளது குயோவ் எஃப்சி குழு.

காற்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் இக்குழு தனது ஆட்டத்தைத் தொடர்ந்து நிரூபிக்கும் வகையில் இதில் இடம் பெற்றுள்ள மூத்த மற்றும் இளம் விளையாட்டாளர்களுக்கு வேய்ன் ஓங் ஜெர்சி வழங்கி உற்சாகப்படுத்தினார்.

நாட்டில் சிறந்த காற்பந்தாட்ட அணி என்ற பெயரை குயோவ் எஃப்சி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேய்ன் ஓங் வாழ்த்தினார்.