Homeமலேசியாபிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் இந்திய வணிகர்களுக்கு வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு!  -டத்தோஸ்ரீ...

பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் இந்திய வணிகர்களுக்கு வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு!  -டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர், பிப். 25-இந்திய வணிகர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் பொருட்டு பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்தியர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கம் கொண்ட கடப்பாட்டையே இந்நடவடிக்கை காட்டுகிறது என்றார் துணையமைச்சர்.

அதே வேளையில், இந்தியர்களின் பொருளாதார உயர்வுக்கு பேங்க் ராக்யாட் கொண்டுள்ள அக்கறையையும் இங்கு காண முடிகிறது என்று இங்குள்ள பேங்க் ராக்யாட் மண்டபத்தில் இந்திய தொழில் முனைவர்களுக்கான கடனுதவி காசோலைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் பேங்க் ராக்யாட் இதற்கு முன்பு 50 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டிய துணையமைச்சர் இன்று கூடுதலாக 50 மில்லியன் வெள்ளியை வழங்கியிருப்பதாகக் கூறினார்.

இந்தக் கூடுதல் கடனுதவி வழி இந்தியர்கள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

spot_img

latest articles

explore more