Homeசமூகம்மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு & பழுதுபார்க்கும் பயிற்சிகள்! 

மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு & பழுதுபார்க்கும் பயிற்சிகள்! 

பெராய், பிப். 26-மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மனிதவள அமைச்சு, எச்ஆர்டி கோர்ப், மித்ரா கூட்டமைப்பில் உருவானது தான் மிசி எனப்படும் மலேசிய இந்திய இளைஞர்கள் திறன் பயற்சி திட்டங்களாகும்.

திறமையான தொழிலாளர்களுக்கான தேவைக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் வேளாண்மை, ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற அதிக தேவை உள்ள துறைகளில் பதிவு செய்ய 6,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை வெற்றிகரமாக இத் திட்டம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பினாங்கு பிறை தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இப்பயிற்சிகள் நடைபெற்றன.

இந்தப் பயிற்சி வேகமாக வளர்ந்து வரும் ட்ரோன் துறையில் வருமானம் ஈட்டும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

இதன் மூலம் தொழில் இடைவெளியை குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும், சிறப்பு ட்ரோன் பயிற்சிக்கான வளர்ந்து வரும் தேவையை நிரூபித்ததுடன், எதிர்கால வாழ்க்கைக்காக மலேசியாவில் இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் நிரூபித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து நாள் (40 மணிநேர) பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு சுயமாக ட்ரோன்களின் பழுது, பராமரிப்பு, செயல்பாட்டில் நேரடி அனுபவத்தைத் தந்தது.

இது உலகளாவிய தொழில்துறை பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்துள்ளது.இது போன்ற பயிற்சிகள் பணியாளர்களை புத்தாக்க துறையில் தயார்படுத்துகிறது.

ட்ரோன் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது. விவசாயத் துறையில் ட்ரோன்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

 

spot_img

latest articles

explore more