Homeகுற்றவியல்போதைப் பொருள் குற்றச்சாட்டு:ஆடவர்கள் இருவர் விடுதலை

போதைப் பொருள் குற்றச்சாட்டு:ஆடவர்கள் இருவர் விடுதலை

ஈப்போ, பிப். 26-போதைப் பொருள் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து ஆடவர்கள் இருவரை இங்குள்ள உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

விஜேந்திரன் ராமச்சந்திரன் (39), சசிதரன் தயாளன்(31) ஆகிய இருவரே  குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.

இவ்விருவரையும் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டில் இருந்து ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

2020 செப்டம்பர் 6ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஈப்போ, சன்வே சிட்டி அருகே கார் நிறுத்துமிடத்தில் 1.5 கிராம் ஹெரோஹின் மற்றும். 4.5 கிராம் மொனோ எசிடில்மோர்பான்ஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்ததாக இவ்விருவருக்கு எதிராக முதல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இக்குற்றத்திற்காக போதைப் பொருள் அபாயகர சட்டப் பிரிவு 39எ ( 2) கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, இதே இடத்தில் 73.7 கிராம் மெதாம்தமேமின் ரக போதைப் பொருளை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு இவ்விருவர் மீது 39பி( 2) கீழ்  சுமத்தப்பட்டது.

இவ்விருவரையும் குற்றவாளிகள் என போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க பிரசிகியூஷன் தரப்பு தவறியதைத் தொடர்ந்து இவர்களை இக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி மோசஸ் சூசையன் தீரப்பு அளித்தார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் சரண்சிங் , நத்தாஷா பிரிவினா, டத்தோ சீலன் அர்ஜூணன், பரிடா அர ஷாட் ஆகியோர் ஆஜராயினர்.

அரசு தரப்பில் டிபி்பி கீத்தா, ஜோரா சிங் ஆகியோர் இவ்வழக்கில் வாதாடினர்.

 

spot_img

latest articles

explore more