Homeஅரசியல்பிகேஆர் தேர்தல்:உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்கிறார் அமிருடின் ஷாரி! 

பிகேஆர் தேர்தல்:உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்கிறார் அமிருடின் ஷாரி! 

ஷா ஆலம், மார்ச் 1-இம்முறை பிகேஆர் தேர்தலில் தமது உதவி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முடிவு செய்துள்ளார்.

அதே வேளையில், கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி தொடர்ந்து ஆதரவு அளிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“முன்னேற்றம் காண நாம் ஒருமித்த குரலாக ஒன்றிணைவது அவசியம். இதனைக் கருத்திற் கொண்டு உதவி தலைவராக நான் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன்” என்று சிலாங்கூர் பிகேஆர் தொகுதி மற்றும் கிளை நிலையிலான ஆண்டு கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்படி பல தரப்பினர் தம்மைக் கேட்டுக் கொண்டதாக மலாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமிருடின் ஷாரி கூறியதாகத் தெரிகிறது.

இப்பதவியை ரஃபிசி கடந்த 2022 முதல் வகித்து வருகிறார்.

 

spot_img

latest articles

explore more