கோலாலம்பூர், மார்ச் 2-இன்று நோன்பு தொடங்கப்பட்டதையொட்டி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜாரித் சோஃபியா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இப்புனித மாதத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதோடு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைப் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
“இந்த உன்னத மாதத்தில் மலேசிய மக்கள் அனைவரும் வளம் பெற்றிட வேண்டும். இவர்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நடக்கக் கூடாது”என்று சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-பெர்னாமா


