தமிழ்நாடு, மார்.16-

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ.டாக்டர் எம்.சரவணன் கலந்து கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழ்நாட்டு அமைச்சர்கள், கல்விமான்கள் உலகப் பேரறிஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், கவிப்பேரரசின் மகாகவிதை எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் வெளியிட முதல் நூலை டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் பெற்றுக்கொண்டார்.கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகள் கவிஞர் என்கின்ற எல்லையைத் தாண்டி. வாழ்வியலுக்குத் தேவையான சமுதாயத்தை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தக்கூடிய பல விஷயங்களைக் கொண்டுள்ளன என சரவணன் குறிப்பிட்டார்.

தமிழுக்கும் இலக்கியத்திற்கும் மகுடம் சூட்டும் விழாவாக அமைந்த இந்த பன்னாட்டுக் கருத்தரங்கைதமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்.