கோலாலம்பூர், மார்ச் 17-வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் தேர்தலில் கட்சியின் உதவி தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவிருப்பதாக தொடர்பு துறை அமைச்சர் பாஃமி பாஃட்சில் அறிவித்தார்.
கட்சியில் சில தலைவர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவைத் தாம் எடுத்ததாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான பாஃமி குறிப்பிட்டார்.
மதிப்பீடு மற்றும் கலந்துரையாடல் வழி கட்சியில் விசுவாசத்தோடு பணியாற்றுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன் என்றார்.
“மாநிலங்களுக்கான வருகை, லெம்பா பந்தாய் தொகுதி மற்றும் அடிமட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் உதவி தலைவர் பதவிக்கு களம் இறங்க முடிவு செய்தேன்” என்று லெம்பா பந்தாய் ரமலான் சந்தையில் பொது மக்களுக்கு பேரிச்சம்பழங்கள் மற்றும் நோன்பு கஞ்சி வழங்கிய பின்னர் பாஃமி செய்தியாளர்களிடம் பேசினார் .