கோத்தாகினபாலு, மார்ச் 16-பொதுப்பணி  இலாகாவின் (ஜேகேஆர்) கீழ்  நாடு முழுவதும் 801 மேம்பாட்டு திட்டங்களில் 3.62% அல்லது 29  மட்டுமே நலிவடைந்த திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன  என்று பொதுப்பணி துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் தெரிவித்தார்.

குத்தகையாளர்  பிரச்சினையைத்  தவிர்த்து 11 திட்டங்கள்  உள் நிர்வாக பிரச்சினை, 7 பலவீனமான திட்டமிடல், 3 நிதிப் பிரச்சினை மற்றும் 1தாமதமான தொழிற்துறை கட்டுமான முறை பிரச்சினை போன்றவற்றை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார் .

சபாவைப் பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள  29 நலிவடைந்த மேம்பாட்டு திட்டங்களில்  இரண்டு மட்டுமே நலிவடைந்தவையாக வகை பிரிக்கப்பட்டன என்றார்.

ஆனால், பொதுப்பணி அமைச்சின் கீழ் உள்ள 96 க்கும் மேற்பட்ட மேம்பாட்டு திட்டங்கள் ஆரோக்கியமானவை என்று இங்குள்ள லோக் காவி ராணுவ முகாமில் ராணுவ குடும்பத்தினருக்கான வீடமைப்பு கட்டுமான திட்ட தளத்திற்கு  வருகை  மேற்கண்டபோது செய்தியாளர்களிடம் விவரித்தார் .