புத்ராஜெயா, மார்ச் 18-இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை எப்போதும் வலுவுடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ  வலியுறுத்தினார்.

இலக்கவியல் அமைச்சு நேற்று ஏற்பாடு செய்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

இலக்கவியல் அமைச்சில் மலாய், சீனர் இந்தியர்கள் உட்பட கிழக்கு மலேசியாவிலுள்ள பிற இனத்தவர்களும் பணிபுரிவதாக அறிவித்த அமைச்சர், தமது அமைச்சில் அனைத்து இன அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து சேவையாற்றுவது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மலேசியர்களாகிய நாம் அனைவரின் நம்பிக்கையை மதித்து ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம். அதற்குச் சான்றாக இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி திகழ்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.