பந்திங், மார்ச் 22-விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளையொட்டி தமது தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களுக்கு பெருநாள் பற்றுச் சீட்டுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராய்டு.
இங்குள்ள இக்கோன்சேவ் பேரங்காடியில் “ஜோம் ஷாப்பிங் பெருநாள் “பற்றுச் சீட்டுகளை இன்று காலையில் பாப்பாராய்டு வழங்கினார்.
இந்தப் பற்றுச் சீட்டுகள் பி40 பிரிவு மக்கள் பெருநாளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்குகிறது.
200 வெள்ளி மதிப்புடைய இந்தப் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் மக்கள் பொருட்களை வாங்கலாம்.
இதன் அடிப்படையில் இத்திட்டத்திற்காக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 தொகுதி மக்களுக்காக 7.9 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
இம்மாநில மக்களின் நலன்கள் தொடர்ந்து காக்கப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையே இது பறைசாற்றுகிறது என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனத்தைச் சமாளிப்பதற்கு இது ஓரளவு உதவும் என்றார்.


