பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22-
வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு புக்கிட் காசிங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கு “ஜோம் ஷாப்பிங்” பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பற்றுச் சீட்டுகளை இங்குள்ள டாமான்சாரா என்எஸ்கே குரோசர் பேரங்காடியில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீப் ரிஷாகரனிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்தப் பெருநாள் கால பற்றுச் சீட்டுகளை பி40 பிரிவு மக்களுக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்குகிறது.
200 வெள்ளி மதிப்புடைய இந்தப் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தினர் பெருநாளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார் ரஜீவ்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 56 தொகுதி மக்களுக்காக 7.9 மில்லியன் வெள்ளியை சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


