Homeசமூகம்பகுதி நேர நிருபர் & புகைப்படக்காரர்களுக்கு பாதுகாப்பு அனுகூலங்கள் அவசியம்! -அமைச்சர் ஸ்டீவன் சிம் 

பகுதி நேர நிருபர் & புகைப்படக்காரர்களுக்கு பாதுகாப்பு அனுகூலங்கள் அவசியம்! -அமைச்சர் ஸ்டீவன் சிம் 

கோலாலம்பூர், மார்ச் 26-தங்களின் பகுதி நேர நிருபர் மற்றும் புகைப்படக்காரர்களின் நலன்களைப் பேண அவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும்படி ஊடக நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 700பகுதி நேர நிருபர்கள் மற்றும் 500 புகைப்படக்காரர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இடம் பெற்றிருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

“70 விழுக்காடு சந்தாவை அரசாங்கம் செலுத்துகிறது. ஊடக நிறுவனங்கள் 30 விழுக்காடு சந்தாவைச் செலுத்தினால் போதுமானது. தவிர,பகுதிநேர தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ஊடக துறையைச் சேர்ந்தவர்களும் இவர்களில் அடங்குவர்” என்று தலைநகரில் நேற்று நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மனித வள துணையமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹாஜி முகமது, எச்ஆர்டிஎஃப் கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் ஹமித், அமைச்சு மற்றும் எச்ஆர்டிஎஃப் கோர்ப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் 3 சமூக அமைப்புகளுக்கு அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி வழங்கினார்.

 

 

 

 

spot_img

latest articles

explore more