Homeசமூகம்வளமும், நலமும் நீடிக்கட்டும்!  -டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து 

வளமும், நலமும் நீடிக்கட்டும்!  -டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து 

கோலாலம்பூர், மார்ச் 30-மலேசியாவில் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் அனைவருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) சார்பில் 2025 தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.

பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டிற்கு இப்பொழுது பண்டிகை காலம் மலர்ந்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு சமய விழாக்கள் கொண்டாடப்படவிருக்கின்றன.

அந்த வகையில் இன்று மார்ச் 30- ஆம் நாள் உலகெங்கும் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் தங்களின் உகாதி புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த இனிமையான தருணத்தில் மஇகாவும் பங்கெடுத்துக் கொள்ளும். அதேவேளையில், மலேசியாவில் வாழ்கின்ற அனைத்து தெலுங்கு மக்களும் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் ‘உகாதி சுபகாஞ்சலு’-இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மேலவை முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

latest articles

explore more