Homeசமூகம்எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்தது! ஐவர் மருத்துவமனையில் அனுமதி

எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்தது! ஐவர் மருத்துவமனையில் அனுமதி

சுபாங் ஜெயா ஏப்ரல் 1-இங்குள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து தீ பற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 25 பேருக்கு தொடக்க சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜாலான் புத்ரா ஹார்மோனியில் இன்று நடந்த இச்சம்பவத்தில் சுமார் 25 பேர் தீப்புண் காயம் மற்றும் சுவாச பிரச்சனைக்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள காளியம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தனர்.

ஐவர் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்குப் பின்னர் அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் காலை 8.10க்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் அருகாமையில் உள்ள சில வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது.

 

 

spot_img

latest articles

explore more