கோலாலம்பூர், ஏப். 1-இந்நாட்டில் கொண்டாடப்படும் பெருநாட்கள் பல்லின மக்களிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று கெஅடிலான் வங்சா மாஜூ தொகுதி தலைவர் லாய் சென் ஹெங்தெரிவித்தார்.

ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்வதற்கும், சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற உயர் குணங்களைப் போற்றும் விதமாக நாட்டில் பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் நோன்பு பெருநாளும் பல்லின மக்களிடையே ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று தலைநகரில் நோன்பு பெருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் சமூக அன்பர்களின் வீடுகளுக்கு வருகை மேற்கண்டபோது அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய முஸ்லீம் இளைஞர் அமைப்பின்(கெபிமா) தோற்றுநரும் ஆலோசகருமான முகமது காதிர் அலியின் இல்லமும் இதில் அடங்கும்.
இந்த நோன்பு பெருநாள் காலத்தில் அவர்களின் வீடுகளுக்கு வருகை புரிந்து பெருநாள் குதூகலத்தைப் பகிர்ந்து கொள்வது அனைவரிடத்திலும் ஐக்கியத்தை மேலோங்கச் செய்யும் என்றார் சென் ஹெங்.


