சுபாங் ஜெயா, ஏப். 1-இங்குள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவத்தில் காயமுற்ற 12 பேர் உட்பட மொத்தம் 82 பேர் காப்பாற்றப்பட்டதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் நூருல் இமான் மசூதி மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் ஆகியவற்றில் தொடக்க கட்ட சிகிச்சை பெற்றனர். பின்னர் இவர்கள் புத்ரா ஹைட்ஸில் உள்ள பொது மண்டபத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மையத்திற்கு மாற்றப்பட்டதாக இவர் சொன்னார்.
சம்பவ இடத்தில் 78 வீரர்களை உட்படுத்திய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் காலை மணி 8.10 தொடங்கி தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாக மந்திரி பெசார் கூறினார்.
ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸில் உள்ள அந்த எரிவாயு குழாயில் எஞ்சிய எரிவாயு இருந்த காரணத்தினால் தீ இன்னும் வேகமாகப் பற்றிக் கொண்டு எரிந்ததாக அமிருடின் விவரித்தார் .


