Homeஅரசியல்ஈராண்டுகளில் பலமிக்க கட்சியாக பிபிபி கம்பீர நடைபோடும்!  -டத்தோ லோகபாலா திட்டவட்டம்

ஈராண்டுகளில் பலமிக்க கட்சியாக பிபிபி கம்பீர நடைபோடும்!  -டத்தோ லோகபாலா திட்டவட்டம்

கோலாலம்பூர், ஏப். 10-பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது மறுபிரவேசம் கண்டுள்ள மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) இன்னும் ஈராண்டுகளில் பலம் வாய்ந்த கட்சியாக நாட்டில் பீடு நடைபோடுவது நிச்சயம் என்று தெரிவிக்கப்பட்டது.

பல்லின கட்சியான பிபிபி மக்களின் நலன் காக்க இவர்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும் என்று இதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தினார்.

“பிபிபி ஒரு கொசு கட்சி அல்ல. நாங்கள் ஒரு சிறிய கட்சி என்று கிண்டல் அடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். எங்களின் சேவை உங்களுக்கு பதில் சொல்லும்” என்று இங்குள்ள பிபிபி தலைமையகத்தில் இதன் 72ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“நீதிமன்ற படிகள், ஆர்ஓஎஸ் பணிகள் என நாங்கள் ஓய்வு கொள்ள முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் எங்களைத் துரத்தின”.

எனினும், இறைவன் அருளால் இவற்றையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து இன்று பிபிபி கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறோம் என்றார்.

“கட்சி வலுப்பெற அனைத்து உறுப்பினர்களும் என்னோடு தோள் கொடுக்க வேண்டும் “ என்றார் அவர்.

பிபிபி கட்சியின் 72 ஆம் ஆண்டு கொண்டாட்டம் கம்போங் அத்தாப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ லீ ஹாங், முன்னாள் செயலாளர் டத்தோ அஸ்பார் அலி, நடப்பு செயலாளர் டத்தோ இந்தர் ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, துணை பொருளாளர் டத்தோ அண்ட்ரூ, சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பல மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிிறப்பித்தனர்.

 

spot_img

latest articles

explore more