Homeசமூகம்ஸ்ரீ முருகன்- கூகுள் மலேசியா புதிய சகாப்தம்! 

ஸ்ரீ முருகன்- கூகுள் மலேசியா புதிய சகாப்தம்! 

கோலாலம்பூர், ஏப். 13-

நாடு முழுமையும் உள்ள இந்திய மாணவர்கள் பயனடையும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் கூகள் மலேசியாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கல்வி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தலைநகர் பிரிக்ஃபீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் இயங்கும் தனது நிலையத்தில் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டத்தின் வழி மற்றொரு சகாப்தத்தைப் படைத்துள்ளது ஸ்ரீ முருகன் நிலையம்.

“நடப்பு தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப மாணவர்கள் புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இப்பயிற்சி நன்கு உதவும்” என்றார் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா.

“கூகள் மலேசியா ஸ்ரீ முருகன் நிலையத்துடன் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளது. இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைவர் ஃபைருஸ் கலந்து கொண்டு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெறுவதை நேரில் கண்டார்” என்றார் சுரேன்.

“இந்த வேளையில் கூகள் மலேசியாவுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். குறிப்பாக ஜைனலுக்கும் அவர்தம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

இந்திய மாணவர்கள் கூகள் தலைமை செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை போன்று உலகின் பெரிய பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வகிக்க வேண்டும். அதற்கு இது போன்ற பயிற்சி ஓர் அஸ்திவாரம் ஆகும் என்று இப்பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ முருகன் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயிற்சி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் காண்பதற்கும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக சுரேன் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more