Homeசமூகம்எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது ஸ்ரீ முருகன் நிலையம்!  -ஸ்ரீ கணேஷ்

எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது ஸ்ரீ முருகன் நிலையம்!  -ஸ்ரீ கணேஷ்

கோலாலம்பூர், ஏப். 13-மாணவர்கள் கல்வியோடு இணைந்து முக்கிய திறன்களை வளர்த்துக் கொள்வது எதிர்கால சவால்களை இவர்கள் எதிர்கொள்வதற்குத்   துணை புரியும்.

குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆங்கில மொழி ஆற்றல் ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம் என்று ஸ்ரீ முருகன் நிலைய கல்வி பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் வலியுறுத்தினார்.

இன்னும் பத்து அல்லது 20ஆண்டுகளில் வேலை சந்தையில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக கல்வியோடு முக்கிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் இந்நிலையம் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு அஸ்திவாரம் கூகள் மலேசியாவுடன் இணைந்து ஸ்ரீ முருகன் நிலையம் இன்று தொடங்கிய செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டமாகும் என்றார் ஸ்ரீ கணேஷ்.

பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் கூகள் மலேசியா – ஸ்ரீ முருகன் நிலைய செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது.

இந்நிகழ்ச்சியில் கூகள் மலேசியா கல்வி பிரிவு தலைவர் ஃபைருஸ் கலந்து கொண்டார்.

விவேக கைத்தொலைபேசி வழி முகநூல் செயலியை எப்படி உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 3டி, 4 டியில் புத்தகத்தைப் பார்க்கும் பயிற்சி. இதில் உண்மையான நபர் போல் காட்சி அளிக்கும்.  அடுத்து, இயந்திரவியல் பயிற்சியும் அளிக்கப்படும்.

இம்மூன்று பயிற்சிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும்.

இந்தப் பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் ஸ்ரீ முருகன் நிலையங்களில் வருட இறுதி வரை நடத்தப்படும்.

மாணவர்களோடு ஆசிரியர்கள் மற்றும் இந்நிலைய தன்னார்வலர்களும் இப்பயிற்சிகளில் பங்கேற்கலாம் என்றார் ஸ்ரீ கணேஷ்.

 

 

 

spot_img

latest articles

explore more