Homeசமூகம்சமூகம்கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு! உலக  தலைவர்கள் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு! உலக  தலைவர்கள் இரங்கல்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்க தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலை 7. 30 மணியளவில் காலமானதாக  அறிவிக்கப்பட்டது.

88 வயதான அவர் இரட்டை நிமோனியாவிலிருந்து மீண்டு வந்தார்.

“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனிதத் தந்தை பிரான்சிஸ் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன்,” என்று கார்டினல் கெவின் ஃபாரெல் வத்திக்கான் தொலைக்காட்சி சேனலில் தெரிவித்தார்.

போப் ஆண்டவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் உலகத் தலைவர்கள் போப்பின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

spot_img

latest articles

explore more