Homeஅரசியல்பிகேஆர் தேர்தலுக்கும் அமைச்சரவை மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை! - பிரதமர் அன்வார்

பிகேஆர் தேர்தலுக்கும் அமைச்சரவை மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை! – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஏப். 21-கெஅடிலான் கட்சித் தேர்தலால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று வெளிவந்துள்ள ஊகங்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கட்சித் தேர்தலுக்கும் அரசாங்க நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

இது தவிர, அமைச்சரவை மாற்றம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் ஒவ்வோர் உறுப்பினரின் செயல்திறன் அடிப்படையில் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் பொருட்டு, மாநில அரசு அல்லது மத்திய அரசு வழக்கம் போல் செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று பிரதமர் அன்வார் விளக்கமளித்தார்.

மேலும், கட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் கேள்வி இருந்தால் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் அதற்கான பதில்கள் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

 

spot_img

latest articles

explore more