Homeமலேசியாகோவிட்19: 2025-இல் முதல் உயிரிழப்பு பதிவு

கோவிட்19: 2025-இல் முதல் உயிரிழப்பு பதிவு

கோலாலம்பூர், ஜூன் 19-

நாட்டில் கோவிட் 19 தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தொற்றால் இவ்வாண்டு பதிவான முதல் உயிரிழப்பு அதுவாகும்.

உயிரிழந்த நபர், இருதய நோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கொண்டிருந்ததாகவும் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளவில்லை எனவும் சுகாதார அமைச்சு கூறியது.

ஆகக் கடைசியாக நாட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, கோவிட் 19 தொடர்பான உயிரிழப்பு பதிவாகியிருந்தது

spot_img

latest articles

explore more