Homeஅரசியல்சரவாக் முதலமைச்சரின் மனைவி காலமானார்

சரவாக் முதலமைச்சரின் மனைவி காலமானார்

 

கூச்சிங், ஜூன் 23-

சரவாக் முதலமைச்சர் தான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபெங் மனைவி புவான் ஸ்ரீ ஜுமா’ஆனி துவாங்கு புஜாங் இன்று அதிகாலை 3:34 மணிக்கு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இந்த துயரச் செய்தியை சரவாக் முதலமைச்சர் அலுவலகத்தின் துணை அமைச்சர் டத்தோ அப்துல்லா சைடோல் வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தார்.

இறுதி மரியாதை இன்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மசூதி ஜாமேக் நெகேரியில் நடைபெறும். பின்னர், பெட்ரா ஜெயாவில் உள்ள இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார்.

ஜுமா’ஆனி, சரவாக்கின் இரண்டாவது ஆளுநர் துன் துவாங்கு புஜாங் துவாங்கு ஒத்மானின் மகள் ஆவார். அவருக்கு 45 வயதான மகன் அபாங் அப்தில்லா இஸ்ஸாரிம் மற்றும் 43 வயதான மகள் டயாங் நோர்ஜிஹான் உள்ளனர்.

spot_img

latest articles

explore more