லாருட், ஜூலை 5-

கோலாலம்பூரில் சோலாரிஸ் துட்டமாஸில் உள்ள பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் தலைமையகம் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டதாக கூறப்படுகின்றது.

அது தொடர்பில், தாம் எந்த தகவலும் அறிந்திருக்கவில்லை என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் தெரிவித்தார்.

“இந்த விவகாரம் குறித்து எனக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை. ஏனெனில், நான் அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் இல்லை. இது கட்சியின் நிர்வாகத்தின் கீழ் வரும் விஷயம்.

அதனால், பொதுச் செயலாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அவர்கள் புதிய இடத்தைத் தேடிக்கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே கண்டுபிடித்திருக்கலாம்,” என்றாரவர்.

பெர்சாத்து லாருட் தொகுதி மாநாட்டை தொடக்கிவைத்தப்பிறகு, டத்தோ ஸ்ரீ ஹம்ஸா செய்தியாளர்களிடம் பேசினார்.