கோலாலம்பூர், ஜூலை 5-
அடுத்த பொதுத் தேர்தலே அம்னோவை இளைஞர்கள் ஏற்றுக் கொண்டார்களா ,இல்லையா என்பது மீதான முடிவை வெளிப்படுத்தும் என அக்கட்சியின் உதவித் தலைவர் ஜொஹாரி கனி சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போதைய இளைஞர் சமுதாயம் அம்னோவின் முந்தைய அர்ப்பணிப்பு சேவைகளைத் தெரிந்து கொள்ள விருப்பமில்லாமலும் வாழ்க்கையில் எந்தவொரு கொள்கைப் பிடிப்பும் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் 16ஆவது பொதுத்தேர்தலானது அம்னோவில் கொள்கைகளை இளைஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா என்பது பற்றித் தெரிய வருமென்று ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலான அம்னோவின் சேவையை இனிமேலும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, கட்சியை நடத்த முடியாது என்றும் மக்கள் தொகையில் 40 விழுக்காடாக இருக்கும் இளைய சமுதாயம் அம்னோவை ஆதரிப்பதை உறுதி செய்வதே முக்கியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-பொன் முனியாண்டி